Suivant


டிராகன் சிக்கன் | Dragon Chicken Recipe in Tamil

0 Vues
HomeCooking Tamil
0
Publié le 01/30/25 / Dans HomeCooking Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/QxUz-pc1_iw

டிராகன் சிக்கன் | Dragon Chicken in Tamil

தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைக்க

சிக்கன் - 300 கிராம்
உப்பு
மிளகு
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
முட்டை - 1
சோள மாவு - 3 தேக்கரண்டி

சாஸ் தயாரிக்க

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - 1/4 கப்
நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
நறுக்கப்பட்ட பூண்டு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் சிதறல்கள் - 2 தேக்கரண்டி
வெங்காயத்தாள்
குடை மிளகாய் - 1/2
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
சில்லி சாஸ் - 4 தேக்கரண்டி
தக்காளி கெட்ச்அப் - 3 மேசைக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1/2 கப்
கரைத்த சோள மாவு
உப்பு

#டிராகன்சிக்கன் #IndoChinese #DragonChicken


செய்முறை
1. முதலில் ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை தேவையான அளவு உப்பு, தேவையான அளவு மிளகு தூள், சோயா சாஸ், முட்டை, சோள மாவு சேர்த்து நன்கு கலக்கி முப்பது நிமிடம் மூடி வைக்கவும்
2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மூடி வைத்த சிக்கனை பொரித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்
3. ஒரு கடாயில்எண்ணெய், முந்திரி பருப்பு, நறுக்கிய இஞ்சி,நறுக்கப்பட்ட பூண்டு,காய்ந்த மிளகாய் சிதறல்கள், வெங்காயத்தாள், குடை மிளகாய் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்ச்அப், சர்க்கரை, தண்ணீர் கரைத்த சோள மாவு , உப்பு சேர்த்து 4.பின்னர் பொறித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து சாஸ் முழுவதும் கலக்கவும்
5. சுவையான டிராகன் சிக்கன் தயார்

Montre plus
0 commentaires sort Trier par

Suivant