اگلا


செட்டிநாடு மீன் வறுவல் | Chettinad Fish Fry Recipe in Tamil

0 مناظر
HomeCooking Tamil
0
پر شائع ہوا۔ 01/30/25 / میں HomeCooking Tamil

செட்டிநாடு மீன் வறுவல்

செட்டிநாடு மீன் வறுவல் மிகுந்த சுவையுடையது, மற்ற மீன் வறுவல்களை காட்டிலும் இதன் சுவை தனித்தன்மை கொண்டது.இதன் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


தயாரிப்பு நேரம் - 20 நிமிடங்கள்
சமையல் நேரம் - 15 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

வஞ்சரம் மீன் - 4 துண்டுகள்
பச்சை மிளகாய் - 2 (விருப்பத்திற்கு ஏற்ப )
தேங்காய் எண்ணெய்
உப்பு

செட்டிநாடு மீன் மசாலா தூள்

சீரகம் - 2 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
கிராம்பு - 10
சிவப்பு மிளகாய் - 12
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் & பூண்டு பேஸ்ட்
சிறிய வெங்காயம் - 10
பூண்டு - 4 பற்கள்

#செட்டிநாடுமீன்வறுவல் #மீன்வறுவல் #ChettinadFishFry #FishFry

செய்முறை

1. முதலில் கடாயில் சீரகம்,சோம்பு, கொத்தமல்லி விதை, மிளகு, கிராம்பு,சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும்
2. இளஞ்சிவப்பாகும் வரை வறுத்த பின்பு அடுப்பை அணைத்து விட்டு மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் ஆகிவற்றைய கலந்து கொள்ளவும்
3. அவற்றை சிறிது நேரம் ஆறவிட்ட பிறகு மிக்சியில் தண்ணீர் இல்லாமல் வரலாக அரைக்கவும் .
4. அரைத்த செட்டிநாடு மீன் மசாலா தூளை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும் .
5. அடுத்து, சிறிய வெங்காயத்தையும், பூண்டையும் சேர்த்து அரைக்கவும்
6. அரைத்த வெங்காயம், பூண்டு பேஸ்ட்டில் செட்டிநாடு மசாலா தூளை சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து கலக்கவும்
7. கிடைத்த மசாலா பேஸ்ட்டை வஞ்சரம் மீன் துண்டுகளில் இருபுறமும் நன்கு ஒட்டும் படி தடவி பத்து முதல் முப்பது நிமிடங்களுக்கு (மீன் துண்டுகளில் மசாலா உள்ளே இறங்கும் வரை )ஊற வைக்கவும்
8. பின்பு கடாயில் தேங்காய் எண்ணையை ஊற்றி சூடு ஏற்ற வேண்டும்
9. பிறகு மசாலாவில் ஊறிய மீன் துண்டுகளை எண்ணையில் போட்டு பொன்னிறமாகும் வரை மீனின் இருபுறங்களையும் பொறிக்கக்கவும்.
10. செட்டிநாடு மீன் வறுவல் தயார் .

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH...
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : http://www.ventunotech.com

مزید دکھائیں
0 تبصرے sort ترتیب دیں

اگلا