次に


சேமியா முட்டை புலாவ் | Vermicelli Egg Pulao Recipe in Tamil

0 ビュー
HomeCooking Tamil
0
に公開 01/28/25 / の HomeCooking Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/WCjLq9Ba7nU

சேமியா முட்டை புலாவ் | Vermicelli Egg Pulao in Tamil

தேவையான பொருட்கள்

நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
சேமியா- 1 கப் (250 மில்லி)
இலவங்கப்பட்டை - (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn)
பிரியாணி இலை (Buy: https://amzn.to/31cpSxL)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1
பீன்ஸ் - 3
பச்சை பட்டாணி - 1 மேசைக்கரண்டி
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை (Buy: https://amzn.to/2RC4fm4)
தண்ணீர் - 1 & 3/4 கப்
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
முட்டை - 4
மிளகு தூள் (Buy: https://amzn.to/2RElrrg)
மிளகாய் தூள் - ஒரு சிட்டிகை (Buy: https://amzn.to/3b4yHyg)

#சேமியாமுட்டைபுலாவ் #eggpulao #pulaorecipe

செய்முறை

1. சேமியா முட்டை புலாவ் செய்ய, முதலில் சேமியாவை வறுக்க வேண்டும். அதற்க்கு ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து வைக்கவும்

2. அடுத்து அதே கடாயில் நெய் சேர்த்து சூடேற்றிய பின்பு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்

3. வெங்காயம் பொன்னிறமானவுடன் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ், பச்சை பட்டாணி, பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்

4. அடுத்து இந்த கலவையில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைக்கவும்
5. ஐந்து நிமிடம் கழித்து காய்கறிகள் வெந்தவுடன் வறுத்த சேமியா சேர்த்து சேமியாவை வேகவைக்கவும்

6. அடுத்து ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்

7. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கலக்கி வைத்த முட்டையை ஊற்றி முட்டையை பொறித்துக்கொள்ளவும்
8. இந்த முட்டையை வேகவைத்த சேமியாவில் சேர்த்து நன்கு கலக்கவும்

9. சுவையான மற்றும் எளிமையான சேமியா முட்டை புலாவ் தயார்

10. நறுக்கிய கொத்தமல்லி இலையை அதன் மேல் தூவி பரிமாறவும்

もっと見せる
0 コメント sort 並び替え

次に