التالي


பட்டர் சிக்கன் | Butter chicken Recipe in Tamil

0 المشاهدات
HomeCooking Tamil
0
نشرت في 01/28/25 / في HomeCooking Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/D_fYk8mBaF4

பட்டர் சிக்கன் | Butter chicken in Tamil | Dinner Recipe

தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைக்க

சிக்கன் - 200 கிராம்
நசுக்கிய இஞ்சி & பூண்டு - 1 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
1/2 பழம் - எலுமிச்சை சாறு
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி

மசாலா விழுது தயாரிக்க

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
நசுக்கிய இஞ்சி & பூண்டு - 1 தேக்கரண்டி
தக்காளி - 3
காஷ்மீரி மிளகாய்- 3
உப்பு - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 2 மேசைக்கரண்டி
முந்திரி பருப்புகள் - 10
தண்ணீர் - 1/4 கப்

பட்டர் சிக்கன் செய்ய

வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தண்ணீர்
கிரீம் - 1/4 கப்
கஸுரி மெதி
கொத்துமல்லி தழை

#பட்டர்சிக்கன் #Butterchicken #DinnerRecipe

செய்முறை
1. முதலில் சிக்கனை ஊறவைக்கவேண்டும்.
அதற்க்கு ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, கெட்டி தயிர், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி முப்பது நிமிடம் ஊற வைக்கவும்
2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் மசாலாவில் ஊறிய சிக்கனை வேகவைத்துக்கொள்ளவும்
3. மசாலா விழுது தயாரிக்க ஒரு கடாயில் ஒரு துண்டு வெண்ணெய், சிறிதளவு எண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
4. வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, காஷ்மீரி மிளகாய், தேவையான அளவு உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்
5. இந்த வதக்கியவற்றில் பத்து முந்திரி பருப்பு சேர்த்த பின்பு மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்
6. அடுத்து பட்டர் சிக்கன் செய்ய ஒரு கடாயில் வெண்ணெய், மிளகாய் தூள் சேர்த்து கலக்கிய பின்பு அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்
7. இந்த கலவையில் வேகவைத்த சிக்கன் துண்டுகள் மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து பாத்திரத்தை மூடிய நிலையில் பத்து நிமிடத்திற்கு சமைக்கவும்
8. பத்து நிமிடத்திற்கு பிறகு கஸூரி மெத்தி மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்
9. சுவையான மற்றும் எளிமையான பட்டர் சிக்கன் தயார்

أظهر المزيد
0 تعليقات sort ترتيب حسب

التالي