次に


பீட்ரூட் அடை | Healthy Beetroot Adai Recipe | Protein Rich Tiffin Recipe

0 ビュー
HomeCooking Tamil
0
に公開 07/12/25 / の HomeCooking Tamil

#Ad #SurfExcelInFoodStainOut

Bright, healthy, and full of flavor — Beetroot Cheela is our new fave! 💖🥞 But those beet stains? Yikes! 😅

Good thing Surf Excel Quick Wash knows how to handle the mess like a boss because Surf Excel ulle Food stains velliye💪🧼 @SurfExcelDaagAcheHai


#BeetrootCheela #EasyRecipes #HealthyEating #FoodieLife #QuickBreakfast #HomeCooking #FoodStainsNoMore #CleanWithSurfExcel #MessyMoments #KitchenDiaries #DesiRecipes #VegetarianLove

பீட்ரூட் அடை
தேவையான பொருட்கள்

வேகவைத்த பீட்ரூட் - 1
தண்ணீர்
கடலை மாவு - 1 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
தண்ணீர்

கொத்தமல்லி சட்னி செய்ய

கொத்தமல்லி இலை
புதினா இலை
துருவிய தேங்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி
பூண்டு
புளி ஊறவைத்தது
உப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தண்ணீர்

செய்முறை:
ஒரு மிக்சி ஜாரில் நறுக்கி வேக வைத்த பீட்ரூட் துண்டுகளை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வையுங்கள்.
இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகம், ஓமம் சேர்த்து நன்கு கிளறவும்.
இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இப்போது பீட்ரூட் விழுதையும் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து சரியான பதத்திற்கு கிளறவும்.
இந்த மாவு 15 நிமிடம் ஊறட்டும்.

கொத்தமல்லி சட்னி செய்ய
ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை சேர்க்கவும்.
அரை கப் துருவிய தேங்காய், 2 பச்சை மிளகாய், ஒரு சிறிய இஞ்சி துண்டு, ஒரு பூண்டு, அரை டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் சீரகம் மற்றும் சிறிய புளி துண்டு சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
சுவையான கொத்தமல்லி சட்னி தயார்!

ஒரு தவாவை அடுப்பில் வைத்து நன்றாக காய வைக்கவும்.
தவா சூடானதும், ஒரு கரண்டி சில்லா மாவை எடுத்து தவாவில் ஊற்றி மெல்ல பரப்பவும்.
சில்லாவின் மேல் மற்றும் ஓரங்களில் சிறிது நெய் ஊற்றவும்.
ஒரு பக்கம் நன்றாக வெந்ததும், சில்லாவை மறு பக்கம் திருப்பி விட்டு அதையும் நன்கு வேக வைக்கவும்.
இரு பக்கமும் நிறம் மாறி நன்றாக வெந்ததும், அதை தவாவில் இருந்து எடுத்து ஒரு தட்டில் பரிமாறவும்.
சுவையான பீட்ரூட் சீலா தயார்.
சூடாக கொத்தமல்லி சட்னி உடன் பரிமாறவும்.

もっと見せる
0 コメント sort 並び替え

次に