Sljedeći


பீன்ஸ் பருப்பு உசிலி | Beans Paruppu Usuli Recipe in Tamil

0 Pogledi
HomeCooking Tamil
0
Objavljeno na 02/05/25 / U HomeCooking Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/TYdpvuTOofU

பீன்ஸ் பருப்பு உசிலி | Beans Paruppu Usuli

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள்
பீன்ஸ் - 1 கப்
உப்பு

பருப்பு கலவையை உருவாக்க

கடலை பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
தண்ணீர்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 7
உப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

#பீன்ஸ்பருப்புஉசிலி #BeansParuppuUsuli #ParuppuUsuli

செய்முறை
1. முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்
2. ஊறிய பருப்புகளை ஒரு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் காய்ந்த சிவப்பு மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
3. அரைத்த பருப்பை இட்லி தட்டில் வைத்து பதினைந்து நிமிடத்திற்கு வேகவைக்கவும்
4. வெந்த பருப்பை சிறிது நேரம் ஆறவிட்டு அதை பொடியாக உதிர்த்துக்கொள்ளவும்
5. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய், உளுத்தம்பருப்பு, கடுகு ,கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்
6. இந்த வதக்கியவற்றில் வேகவைத்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்
7. சுவையான மற்றும் ஆரோக்கியமான பீன்ஸ் பருப்பு உசிலி தயார்

Prikaži više
0 Komentari sort Poredaj po

Sljedeći