تا بعدی


நெஞ்சு எலும்பு சூப் | Mutton Rib Bone Soup Recipe in Tamil

0 بازدیدها
HomeCooking Tamil
0
منتشر شده در 01/28/25 / که در HomeCooking Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://www.youtube.com/watch?v=8cqA7X8V4eM

நெஞ்சு எலும்பு சூப்

தேவையான பொருட்கள்

மசாலா தூள் தயாரிக்க

சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
தனியா - 1 மேசைக்கரண்டி

நெஞ்சு எலும்பு சூப்

அரைத்த மசாலா தூள் - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 6 பற்கள் தட்டியது
சின்ன வெங்காயம் - 1 கப் தட்டியது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
பட்டை - 1” துண்டு
கிராம்பு - 5
சோம்பு - 1 தேக்கரண்டி
பிரியாணி இலை - 1
ஆட்டு நெஞ்சு எலும்பு - 250 கிராம்
தக்காளி - 1 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கல் உப்பு - தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
தண்ணீர் - 3 கப்

செய்முறை
1. முதலில் மசாலா தூள் அரைக்க மிக்ஸியில் மிளகு, சீரகம், தனியா சேர்த்து நன்கு பொடியாக அரைக்கவும்.
2. அடுத்து பூண்டை தோலுடனும், சின்ன வெங்காயத்தையும் நன்கு தட்டி கொள்ளவும்.
3. அடுத்த பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை மற்றும் நெஞ்சு எலும்பு கறியை போட்டு வறுக்கவும்.
4. அடுத்து தட்டிய பூண்டு, தட்டிய சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், ஒரு மேசைக்கரண்டி அரைத்த மசாலா, கல்லுப்பு மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
5. அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
6. பிரஷர் குக்கரை மூடி மிதமான சூட்டில் 10 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
7. பிரஷர் குக்கரை திறந்து அதில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
8. சூடான நெஞ்செலும்பு சூப் தயார்.


#நெஞ்சுஎலும்புசூப் #MuttonRibBoneSoup
#RibBoneSoup

بیشتر نشان بده، اطلاعات بیشتر
0 نظرات sort مرتب سازی بر اساس

تا بعدی