Sljedeći


மிளகு சாதம் | Milagu Sadham | Milagu Sadham Recipe #lunch #ricerecipe #lunchbox #shorts #food

0 Pogledi
HomeCooking Tamil
0
Objavljeno na 01/31/25 / U HomeCooking Tamil

மிளகு சாதம் | Milagu Sadham | Milagu Sadham Recipe | Variety Rice Recipes | Lunch Recipes | @HomeCookingTamil

#pepperrice #milagusatham #lunchboxrecipes #varietyricerecipe

மிளகு சாதம்
தேவையான பொருட்கள்

மிளகு - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
எண்ணெய் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
நெய் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3QOYqCn )
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
கடுகு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
முந்திரி பருப்பு (Buy: https://amzn.to/3DS0FNr)
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3OrZ9qe)
பூண்டு நறுக்கியது
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 கீறியது
கறிவேப்பிலை
உப்பு (Buy: https://amzn.to/3OrZ9qe)
வேகவைத்த சாதம்
பொடித்த மிளகு சீரக தூள்

செய்முறை
ஒரு மோர்ட்டர் அல்லது மிக்சர் ஜாரில், மிளகு மற்றும் சீரகத்தை எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் சில முந்திரி சேர்க்கவும்.
அவை வறுத்தவுடன், மெல்லியதாக நறுக்கிய பூண்டு மற்றும் ஒரு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கீறிய பச்சை மிளகாய் மற்றும் சில கறிவேப்பிலை சேர்க்கவும்.
உப்பு சேர்த்து கலக்கவும்.
அரைத்த மிளகு, சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
வேகவைத்த சாதத்தை சேர்த்து, அனைத்தையும் நன்கு கலக்கவும்.
மேலும் சிறிது மிளகு தூள், உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
சுவையான மிளகு சாதம் நன்றாகவும் சூடாகவும் பரிமாற தயார்.

Prikaži više
0 Komentari sort Poredaj po

Sljedeći