Suivant


காலிபிளவர் கிரேவி | Cauliflower Curry #cauliflower #gravy #food #cooking #recipes

0 Vues
Publié le 07/12/25 / Dans Recipes Of The World

காலிபிளவர் கிரேவி | Cauliflower Gravy Recipe in Tamil | Side Dish Recipes | @HomeCookingTamil

#califlowerrecipesintamil #CauliflowerGravy #SideDishRecipes #homecookingtamil

காலிபிளவர் கிரேவி
தேவையான பொருட்கள்

காலிஃபிளவர்
பட்டாணி - 1/2 கப் வேகவைத்தது
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
சோம்பு - 1 தேக்கரண்டி
பிரியாணி இலை
வெங்காயம் - 2
பூண்டு - 6 பற்கள்
இஞ்சி
முந்திரி - 15
தக்காளி - 1
தண்ணீர்
எண்ணெய்
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர்
கசூரி மேத்தி
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை
1. ஒரு காலிஃபிளவர் எடுத்து, சிறிய அளவிலான பூக்களாக நறுக்கி, வெந்நீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
2. இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காலிஃபிளவர் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடம் வறுக்கவும்.
4. அதே கடாயில்எண்ணெய் சேர்த்து, முழு மசாலாவையும் சேர்க்கவும்.
அதை வறுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி, 15 முந்திரி பருப்பு, தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
5. மிக்சி ஜாடிக்கு மாற்றி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
6. ஒரு அகலமான கடாயில், எண்ணெய் சேர்த்து, சீரகம், அரைத்த மசாலா விழுது சேர்த்து வதக்கவும்.
7. பின் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து அனைத்தையும் கலக்கவும்.
8. பின்னர் தண்ணீர் சேர்த்து வறுத்த காலிஃபிளவர் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு கலக்கவும்.
9. தண்ணீர் சேர்த்து, ஒன்றாக கலந்து, கடாயை மூடி, சமைக்கவும்.
10. சிறிது கசூரி மேத்தி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கவும்.
11. சுவையான காலிஃபிளவர் குழம்பு ரொட்டி, சப்பாத்தி, பூரி, இட்லி அல்லது உங்களுக்கு விருப்பமான புலாவ் ஆகியவற்றுடன் பரிமாற தயாராக உள்ளது.

You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com

Montre plus
0 commentaires sort Trier par

Suivant