Bir sonraki


தவா பன்னீர் | Tawa Paneer Recipe in Tamil

0 Görünümler
HomeCooking Tamil
0
yayınlandı 01/30/25 / İçinde HomeCooking Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/BIph7laJlCU

தவா பன்னீர் | Tawa Paneer in Tamil

தேவையான பொருட்கள்

பன்னீரை ஊறவைக்க

பன்னீர் - 400 கிராம்
தயிர் - 3 மேசைக்கரண்டி
காஷ்மீர் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி

மசாலா தயாரிக்க

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு ஒட்டு - 1 தேக்கரண்டி
குடைமிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி
காஷ்மீர் மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள்- 1 தேக்கரண்டி
சாட் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
தண்ணீர்

#தவாபன்னீர் #TawaPaneer #Paneerrecipes

செய்முறை

1. முதலில் பன்னீர் துண்டுகளை மசாலாவில் ஊறவைக்கவேண்டும். அதற்க்கு ஒரு கிண்ணத்தில் பன்னீர் துண்டுகள், தயிர், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி பத்து நிமிடம் மூடிவைக்கவும்
2. அடுத்து ஒரு தோசை சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பிறகு அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
3. வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, நறுக்கிய குடை மிளகாய், மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலா தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்
4. அடுத்து மசாலாவில் ஊறவைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்
5. இறுதியாக இதன் மேல் கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்
6. சுவையான மற்றும் மிகவும் எளிமையான தாவா பன்னீர் தயார்

Daha fazla göster
0 Yorumlar sort Göre sırala

Bir sonraki