Следующий


மாங்காய் தொக்கு | Raw Mango Thokku Recipe in Tamil

2 Просмотры
HomeCooking Tamil
0
Опубликован в 02/04/25 / В HomeCooking Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/DdvkbMPzJLg

மாங்காய் தொக்கு | Raw mango thokku

தேவையான பொருட்கள்

மாங்காய் - 2
மிளகாய் தூள் - 1/2 கப்
உப்பு - 3 மேசைக்கரண்டி

எண்ணெய் தாளிக்க

எண்ணெய் - 1 கப்
கடுகு - 1 1/2 தேக்கரண்டி
பூண்டு - 10 பற்கள்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 6
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை

கடுகு வெந்தயம் தூள் செய்ய

கடுகு விதைகள் - 2 மேசைக்கரண்டி
வெந்தய விதை - 2 தேக்கரண்டி

#மாங்காய்தொக்கு #Pickle #MangoThokku

செய்முறை
1. முதலில் கடுகு வெந்தயம் தூள் தயாரிக்க வேண்டும். இதற்க்கு ஒரு கடாயில் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
2. வறுத்த கடுகு மற்றும் வெந்தயத்தை சிறிது நேரம் ஆற விட்டு மிக்ஸில் சேர்த்து பொடியாக அரைக்கவும்
3. மாங்காய் தொக்கிற்கு ஒரு எண்ணெய் தாளிக்க வேண்டும் இதற்கு ஒரு கடாயில் நல்லெண்ணெய், கடுகு, பூண்டு, காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு சிறிது நேரம் ஆற விடவும்
4. அடுத்து ஒரு மாங்காய் எடுத்து தோலை சீவிய பின்பு துருவி வைத்துக்கொள்ளவும்
5. துருவிய மாங்காயில் மிளகாய் தூள், உப்பு, கடுகு, வெந்தய தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
5. நன்கு கலக்கிய பின்பு தாளித்த எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
6. நாவின் சுவையை தூண்டக்கூடிய மாங்காய் தொக்கு தயார்

Показать больше
0 Комментарии sort Сортировать по

Следующий