Tiếp theo


வெஜ் மோமோஸ் | Veg Momos Recipe in Tamil

0 Lượt xem
HomeCooking Tamil
0
Được xuất bản trên 01/28/25 / Trong HomeCooking Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/BKXpbu6yF3Y

வெஜ் மோமோஸ் | Veg Momos in Tamil

தேவையான பொருட்கள்

மாவு தயாரிக்க

மைதா - 1 கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர்

மோமோஸ் நிரப்ப

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
பூண்டு
இஞ்சி
குடை மிளகாய்
கேரட் - 1
துருவிய முட்டைக்கோஸ் - 1/2
உப்பு
மிளகு - 1 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை


மோமோஸ் சட்னி
தேவையான பொருட்கள்

தக்காளி - 3
காய்ந்த சிவப்பு மிளகாய் - 8
எண்ணெய் - 1 தேக்கரண்டி
பூண்டு - 2 பற்கள்
இஞ்சி - 1 துண்டு
உப்பு
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை

#vegmomos #Momosrecipe #வெஜ்மோமோஸ்

செய்முறை

1. வெஜ் மோமோஸ் தயாரிக்க முதலில் மாவு பிசைய வேண்டும். அதற்கு ஒரு கப் மைதா, தேவையான அளவு உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்
2. மாவை பிசைந்த பின்பு அதை மூடி போட்டு 30 நிமிடம் மூடி வைக்கவும்
3. அடுத்து மோமோஸ் நிரப்ப ஒரு கடாயில் எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
4. வெங்காயம் நிறம் மாறிய பின்பு நறுக்கிய குடை மிளகாய், துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ், உப்பு, மிளகுத்தூள், வினிகர், கொத்தமல்லி இலை, சோயா சாஸ், மிளகுத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி பின்பு இறக்கி வைக்கவும்
5. அடுத்து பிசைந்து வைத்த மாவில் ஒரு சிறிய உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் தேய்த்து வைத்து செய்து வைத்துக் கொள்ளவும்
6. செய்து வைத்த மாவில் மோமோஸ் கலவையை சேர்த்து அதனை முழுவதும் மூடி வைக்கும் படி அதனை வடிவமைத்துக் கொள்ளவும்
7. செய்து வைத்த மோமோஸை ஒரு இட்லி தட்டில் தண்ணீர் ஊற்றி அதனை 10 நிமிடத்திற்கு வேக வைக்கவும்
8. 10 நிமிடம் வெந்த பின்பு சூடான மோமோஸ் தயார்
9. இதற்கு சட்னி செய்ய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு எட்டு காய்ந்த மிளகாய் மிளகாயை வேகவைத்து கொள்ளவும்
10. அடுத்து 3 தக்காளியை தண்ணீரில் சேர்த்து வேக வைத்து தோலை எடுத்து அதனை வெட்டி வைத்துக் கொள்ளவும்
11. அடுத்து ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதனை சூடு ஏற்றி பின்பு நறுக்கிய தக்காளி, பூண்டு, இஞ்சி வேகவைத்த காய்ந்த மிளகாய், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
12. இந்தக் கலவையை ஒரு மிக்ஸியில் சேர்த்து கொத்தமல்லி இலை சிறிது சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
13. சுவையான மோமோஸும் அதற்க்கு தொட்டுக்க மோமோஸ் சட்னியும் தயார்

Cho xem nhiều hơn
0 Bình luận sort Sắp xếp theo

Tiếp theo