القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن أوقات الصلاة فهرس الموقع

படைப்பாளனான அல்லாஹ் தனது அடியார்களுடன் மகா கருணையாளனாக உள்ளான் என்றால் ஏன் ஒரு தனிநபரின் ஒரு பாலின பாலியல் விருப்பங்களை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை?

"லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பிவைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி ‘‘உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கிறீர்கள்?. நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கிறீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார். இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள்' இவர்கள்தாம் மிக்க பரிசுத்தமான மனிதர்களாயிற்றே' என்று கூறியதைத் தவிர வேறெதுவும் அவரது சமூகத்தாரின் பதிலாக இருக்கவில்லை''. (அல்-அராஃப்: 80-82). تقدم

இந்த வசனம் ஓரினச்சேர்க்கை மனித மரபியலாக வந்த விடயமல்ல என்பதையும், இது மனித மரபணு குறியீட்டின் ஒரு பகுதியுமல்ல என்பதனையும் உறுதிப்படுத்துகிறது. ஏனெனில் லூத் சமூகமே இந்த வகையான ஈனச் செயலில் முதலில் ஈடுபட்டுள்ளனர். இது பாலியல் விலகலான ஓரிணச்சேர்க்கைக்கும் மரபியல் பரம்பரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பரந்த அறிவியல் ஆய்வுகளுடன் ஒத்துப்போகிறது. (அல்குர்ஆன்,அஸ்ஸுன்னா கூறும் அறிவியல் அற்புதங்களுக்கான அல் கஹீல் கலைகளஞ்சியம் (https://kaheel7.net/?p=15851)). تقدم

திருடனின் திருடும் விருப்பத்தை-ஆர்வத்தை –( Interests) நாம் ஏற்று மதிக்கிறோமா? இதுவும் ஒரு வகை ஆர்வமே, ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும், இது ஒரு இயற்கைக்கு மாறான ஆர்வ- நிலையாகும். இது மனித இயல்புக்கு எதிரானதும், இயற்கை ஒழுங்கை மீறுகிற விடயமுமாக இருப்பதால், இது நெறிப்படுத்தப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.

இறைவன் மனிதனை படைத்து சீறான வழியையும் காண்பித்துக் கொடுத்துள்ளான். அந்தவகையில் மனிதன் நன்மை மற்றும் தீமையின் பாதையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவனுக்கு உண்டு.

"நாம் அவனுக்கு நன்மை தீமை எனும் இரு பாதைகளை காட்டிக்கொடுத்தோம்'' (அல்-பலத்: 10). تقدم

எனவே, ஓரினச்சேர்க்கையைத் தடைசெய்யும் சமூகங்களில் இயற்கைக்கு மாறான இச்செயற்பாடு அரிதாகவே வெளிப்படுத்துவதைக் காண்கிறோம், அதே சமயம் அத்தகைய நடத்தையை அனுமதித்து ஊக்குவிக்கும் சூழல்களில் ஓரினச்சேர்க்கையாளர்களின் விகிதம் மற்றும் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காண முடிகிறது. மனிதர்களிடத்தில் காணப்படும் இயற்கைக்கு மாறான இச்செயற்பாட்டை சாத்தியப்படுத்துவதை தீர்மானிப்பது அவர்களைச் சுற்றியுள்ள சூழழும் போதனைகளுமே என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

உதாரணத்திற்கு, தொலைக்காட்சியை கண்டுகழித்தல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் அல்லது குறிப்பிட்ட கால் பந்து விளையாட்டுக் குழு மீதான பற்று ஆகியவற்றின் அடிப்படையில் மனித அடையாளம்- ஆளுமை- நிமிடத்திற்கு நிமிடம் தொடர்ந்து மாற்றத்திற்குட்படுகிறது. எனவே உலகமயமாக்கலானது அவர்களை சிக்கல் நிறைந் மனிதர்களாக கட்டமைத்துள்ளது என்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே இன்று துரோகி ஒரு கருத்தியலாளனாகவும், நடத்தை கெட்டவன் (ஓரினச்சேர்கையாளன்) சாதாரண சீரிய நடத்தை கொண்ட ஒருவனாகவும் மாறிவிட்டனர். அவர்கள் தற்போது பொது வெளியில் விவாதங்களில் பங்கேற்க சட்டப்பூர்வ உரிமையைப் பெற்றுள்ளனர். ஆகையால் நாம் அவர்களை ஆதரித்து சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது!. தொழில்நுட்பத்தை கையகப்படுத்தி வைத்திருப்போரிடமே இப்போது ஆதிக்கமும் அதிகாரமும் காணப்படுகிறது. அந்த வகையில் வக்கிர நடத்தை உடையோரிடத்தில் அதிகாரம் இருப்பின், அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை மற்ற தரப்பினரின் மீது திணிப்பர். இது ஒரு நபர், தன்னுடனும் தன் சமூகம் மற்றும் படைப்பாளனுடனான தனிப்பட்ட உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வழிகோலும். தனிமனிதத்துவம் (Individualism) ஆனது நேரடியாக பாலியல் நெறிபிறழ்வுடன் ((Paraphilia)) இணைவதானது, மனித இனம் சார்ந்த உள்ளார்ந்த மனித இயல்பு மறைந்து, பாரம்பரிய குடும்பம் என்ற கருத்து சரிந்து போவதற்கு காரணமாய் அமைந்து விடும். இந்தக் கருத்தியலின் தொடர்ச்சியானது சமகால மனிதர்களின் சாதனைகளையும், குடும்பம் என்ற கருத்தையும் வீணடித்துவிடும் என்பதால், மேற்குலகம் தனிமனிதவாதத்தை ((Individualism) முறியடிக்கத் தீர்வுகளைத் தேடத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, சமூகத்தில் மக்கள்தொகை குறைவடைதல் பிரச்சினையை மேற்கு நாடுகள் தொடர்ந்து எதிர்கொள்கின்றன. இது புலம்பெயர்ந்தோரை தருவிப்பதற்கான கதவுகளைத் திறக்க வழிவகுக்கிறது. இறை நம்பிக்கையும், அவன் நமக்காக உருவாக்கிய பிரபஞ்ச விதிகளை மதித்து நடப்பதும், அவனுடைய ஏவல் விலக்கல்களை கடைப்பிடித்து ஏற்று வாழ்வதுமே இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சிக்கான பாதையாகும்.

PDF