अगला


முட்டை சாதம் | Egg Rice Recipe #lunch #lunchbox #egg #eggrecipe #eggrice #food #ricerecipe

1 विचारों
HomeCooking Tamil
0
पर प्रकाशित 01/31/25 / में HomeCooking Tamil

முட்டை சாதம் | Egg Rice Recipe In Tamil | Lunch Box Recipe | Egg Recipes | @HomeCookingTamil

#eggriceintamil #lunchboxrecipes #eggrecipes #lunchrecipe

ஆந்திர ஸ்டைல் முட்டை சாதம்
தேவையான பொருட்கள்

மிளகு - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
சீரகம் - 1 தேக்கரண்டி(Buy: https://amzn.to/2NTgTMv)
சோம்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3YtGEpL)
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு - 3 (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் - 1 (Buy: https://amzn.to/2U5Xxrn )
பாஸ்மதி அரிசி - 1 கப் (வேகவைத்தது) (Buy: https://amzn.to/2RD40bC)
முட்டை - 7
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
பூண்டு - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
கறிவேப்பிலை
தக்காளி - 2
உப்பு -1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
அரைத்த மசாலா தூள்
வெங்காயத்தாள்

செய்முறை
1. கடாயில் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு ஏலக்காய் சேர்த்து வறுத்து நன்கு பொடியாக அரைக்கவும்.
2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. பிறகு மெல்லிசாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4. பின்பு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
6. பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
7. அரைத்த மசாலாத்தூளை சிறிதளவு சேர்த்து கலந்துவிடவும்.
8. பின்பு மசாலாவை கடாயில் ஒரு பக்கமாக நகர்த்தி, பிறகு எண்ணெய் ஊற்றி அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
9. உப்பு,மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கடாயை மூடி மிதமான தீயில் 1 நிமிடம் வேகவிடவும்.
10. பின்பு மெதுவாக கலந்துவிட்டு கடாயை மூடி 2 நிமிடம் வேகவிடவும்.
11. பிறகு அரைத்த மசாலா தூளை சேர்த்து கலந்துவிடவும்.
12. கடைசியாக வேகவைத்த பாஸ்மதி அரிசி மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கவும்.
13. ஆந்திர ஸ்டைல் முட்டை சாதம் தயார்!

Egg Rice is a savory rice delicacy that can be made in minutes with cooked rice. This can be enjoyed for lunch or dinner. The rice itself being very flavorful, this simple dish is also easy to carry in lunchboxes because there in no need of any side dish. Egg rice can be made in many ways. In this video, we have shown a special masala powder and then used it to make egg rice. The masala powder can be made whenever you want and it can be stored in an air-tight jar for 1-2 months. You can either use freshly cooked rice or even leftover rice for this recipe. So watch this episode till the end to get a step-by-step guidance on how to make egg rice easily at home. Try this recipe and let me know how it turned out for you guys in the comments below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : https://www.ventunotech.com

और दिखाओ
0 टिप्पणियाँ sort इसके अनुसार क्रमबद्ध करें

अगला