Up next


குஸ்கா | Kushka | kuska recipe | Veg Biryani Recipe in Tamil

0 Views
HomeCooking Tamil
0
Published on 01/28/25 / In HomeCooking Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://www.youtube.com/watch?v=lGPnxdhDAOA&t=12s


குஸ்கா / பிளைன் பிரியாணி

தயாரிப்பு நேரம் - 45 நிமிடங்கள்
சமையல் நேரம் - 40 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1 நறுக்கப்பட்ட
தக்காளி - 1 நறுக்கப்பட்ட
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
தயிர் - 1/4 கப்
பிரியாணி இலை
அன்னாசி பூ
ஏலக்காய்
கிராம்பு
கல் பாசி
கொத்துமல்லி இலை
நெய்
தண்ணீர்
உப்பு

மசாலா பேஸ்ட் தயாரிக்க

சிறிய வெங்காயம் - 6
பூண்டு - 7 பற்கள்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி இலை
புதினா இலை
பிரியாணி இலை
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
அன்னாசி பூ
ஜாதிக்காய்
நெய்

தயிர் பச்சடிக்கு

சிறிய வெங்காயம் - 3 நறுக்கிய
பச்சை மிளகாய் - 1
தயிர் - 1/2 கப்
உப்பு

#குஸ்கா #Khuska #kuska

செய்முறை

1.முதலில் பாஸ்மதி அரிசியை முப்பது நிமிடம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்
2.அடுத்தது குஸ்காவிற்கு மசாலா பேஸ்ட் தயார் செய்ய வேண்டும்
3.கடாயில் நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாவிதிரி, துருவிய ஜாதிக்காய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா இலை, ஆகியவற்றை வறுத்த பின்பு சிறிது நேரம் ஆறவிட்டு அரைத்துக்கொள்ளவும்
4.அடுத்து ஒரு குக்கரில் நெய், பிரியாணி இலை, அன்னாசி பூ, கிராம்பு, ஏலக்காய், கல் பாசி ,பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றை நிறம் மாறும் வரை வதக்கவும்
6.வெங்காயம் பொன்னிறமானவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
7.இந்த வதக்கியவற்றில் அரைத்து வைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்
8.இதனுடன் தயிர் சிறிதளவு சேர்த்து கலக்கவும். இந்த கலவையில் ஊற வைத்த பாஸ்மதி அரிசி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்
8.இரண்டு விசில் வந்த பிறகு சிறிது நேரம் கழித்து குக்கரை திறக்கவும்
9.அருமையான சுவையான குஸ்கா தயார்
10.இந்த குஸ்காவிற்கு தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடவும்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH...
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : http://www.ventunotech.com kushka veg biryani

Show more
0 Comments sort Sort By

Up next