Berikutnya


மைசூர் போண்டா | Mysore Bonda Recipe in Tamil

1 Tampilan
HomeCooking Tamil
0
Diterbitkan di 02/04/25 / Di HomeCooking Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/nQOROajXG2c

தேவையான பொருட்கள்

மைதா - 2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
தயிர் - 1/2 கப்
சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
நறுக்கப்பட்ட வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலைகள்
தண்ணீர்
உப்பு
எண்ணெய்

#மைசூர்போண்டா #MysoreBonda #Bonda

செய்முறை

1. முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, சமையல் சோடா, சீரகம், தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து மாவாக கரைத்துக்கொள்ளவும்
2. இந்த மாவில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கி வைத்துக்கொள்ளவும்
3. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு மாவில் இருந்து சிறு சிறிதாக சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்
4. சூடான மற்றும் சுவையான மைசூர் போண்டா தயார்

Menampilkan lebih banyak
0 Komentar sort Sortir dengan

Berikutnya