Up next


இறால் மிளகு வறுவல் | Prawn Pepper Fry Recipe in Tamil

0 Views
HomeCooking Tamil
0
Published on 01/29/25 / In HomeCooking Tamil

இறால் வறுவல் | Prawn pepper fry

தேவையான பொருட்கள்

மசாலா தூள் தயாரிக்க

மல்லி விதை - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 மேசைக்கரண்டி

வறுவல் செய்ய

அரைத்த மசாலா தூள்
இறால் - 200 கிராம்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை - 1” துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 1
காய்ந்த சிவப்பு மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை
1. முதலில் இறாலை குடல் நீக்கி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி கொள்ளவும்.
2. அடுத்து மசாலா அரைக்க, ஒரு கடாயில் எண்ணெயின்றி தனியா, சீரகம், முழு மிளகு சேர்த்து வறுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்.
3. அடுத்து ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, அதில் பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கிய பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமானதும் இதில் சுத்தம் செய்த இறாலை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கிளறி அதில் உப்பு மற்றும் அரைத்த மசாலா தூள் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
6. இறால் மிளகு வறுவல் தயார்.

#இறால்வறுவல் #Prawnpepperfry #Prawnfry

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow

Show more
0 Comments sort Sort By

Up next